Homeசெய்திகள்தமிழ்நாடுஇருங்காட்டுக்கோட்டையில் ஃபார்முலா 4 கார்க் பந்தயம் - ஓடுதளத்தில் சீறிப்பாயும் கார்கள்

இருங்காட்டுக்கோட்டையில் ஃபார்முலா 4 கார்க் பந்தயம் – ஓடுதளத்தில் சீறிப்பாயும் கார்கள்

-

- Advertisement -

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் ப்ரோமோ பிரைவேட் லிமிடெட் இணைந்து, ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயத்தை நடத்தி வருகின்றனர். இந்த பந்தயம் சென்னை, கோவை, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளன.

இருங்காட்டுக்கோட்டையில் ஃபார்முலா 4 கார்க் பந்தயம் - ஓடுதளத்தில் சீறிப்பாயும் கார்கள்காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தைய ஓடுதளத்தில் முதல் சுற்றுக்கான போட்டிகள் நடந்து முடிந்தன. இந்த போட்டிக்கான இரண்டாம் சுற்று போட்டிகள் சென்னை தீவதடலில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1, இல் நடைபெற்று நிறைவு பெற்றன.

இருங்காட்டுக்கோட்டையில் ஃபார்முலா 4 கார்க் பந்தயம் - ஓடுதளத்தில் சீறிப்பாயும் கார்கள்இந்த நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் மூன்றாம் சுற்றுப்போட்டி இருங்காட்டுகோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பந்தயத்தில் சென்னை, கோவா, டெல்லி ,பெங்கால், பெங்களூரு, ஹைதராபாத், உள்பட 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

இன்றும், நாளையும் நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, புள்ளி பட்டியலின் அடிப்படையில் சிறந்த அணிக்கான கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

MUST READ