
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் உள்ள நடேசன் தெருவில் ‘அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்ட்டில்’ உள்ள கழிவுநீர் தொட்டியில் ஜன.22- ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 48) மற்றும் ரமேஷ் (வயது 49) இருவரும் பிளம்பிங் வேலை செய்தனர்.
செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!
இப்பணியின் போது, சுரேஷ் விஷவாயு தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவரான ரமேஷ் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில், தேசிய சபாய் கரம்சாரி ஆணையத்தின் தலைவர் (தூய்மை பணியாளர்களின் தேசிய ஆணையம்) வெங்கடேசன் சம்பவம் நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஆவடி காவல் துணை ஆணையர் அய்மான் ஜமால் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷிடமும் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், “ஒரு நாள் சுற்று பயணமாக ஆவடி வந்துள்ளேன். சில நாட்கள் முன் ஆவடியில் ஒரு அப்பார்ட்மெண்டில், கழிவுநீர் அகற்றும் போது தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார் என அனைத்து பத்திரிகையில் செய்தி வந்தது. அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.
மேற்கூறிய வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் சுரேஷ் எப்படி இறந்தார் என தெரிய வரும். தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் சார்பில், இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு பொதுநிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தொழிலாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், இது போன்ற துயர சம்பவங்கள் நடக்கின்றன. ஏற்கனவே உள்ள ‘தூய்மை காவலர்கள்’ வாயிலாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு மாவட்டங்களில் கூட கழிவு நீரை அகற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு முன் வரவில்லை,உதவ நாங்கள் தயாராக உள்ளோம் ஆனால் தமிழகத்தில் இருந்து அவ்வாறான கோரிக்கைகள் வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அந்த விஷயத்தில் தமிழகம் மிக அலட்சியமாக செயல்படுகிறது.
துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!
ஆனால், நிரந்தர தூய்மை பணியாளருக்கு ரூபாய் 25,000 முதல் ரூபாய் 35,000 வரை கிடைப்பதால், குடும்பச் சூழல் மாறி விடும். எனவே, தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த பணியாளராகப் பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது. எனவே, தமிழக அரசு அந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.