பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி… தேமுதிக தலைமை அறிவிப்பு…
பா.ஜ.க.வில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநிலத் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நடிகை காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.
அத்துடன், பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறிய நடிகை காயத்ரி ரகுராம், அக்கட்சியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்தார்.
உங்களுடன் சமமாக நடிக்க ஆசை… சத்யராஜை நெகிழவைத்த விஜய் சேதுபதி…
இந்த சூழலில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம், பூங்கொத்து வழங்கி தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.