Homeசெய்திகள்தமிழ்நாடுநூதன முறையில் LSD போதை பொருள் விற்பனை - சேலத்தை சேர்ந்தவர் அதிரடி கைது!

நூதன முறையில் LSD போதை பொருள் விற்பனை – சேலத்தை சேர்ந்தவர் அதிரடி கைது!

-

சுகத்துறை அதிகாரிகளை ஏமாற்றி LSD எனும் போதை பொருளை ஜெர்மனியில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்து நூதன முறையில் விற்பனை செய்து வந்த சேலத்தை சேர்ந்த நபரை இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

ஜெர்மனியில் இருந்து DARK வெப் மூலமாக இந்தியாவிற்கு LSD எனும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் தலைமையிலான போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நாட்டின் பல பகுதிகளில் சோதனை செய்து பாலிவுட் துணை இயக்குநர், மென்பொருள் பணியாளர்கள் என 15கும் மேற்பட்ட நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் இந்தியா முழுமைக்கும் டார்க் வெப் மூலமாக வெளி நாட்டிலிருந்து வாங்கி விற்பனை செய்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி (52) சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். திருமணம் ஆகாத இவர் கடந்த 2021ம் ஆண்டு போதை பொருள் வைத்திருந்ததாக பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் 2023ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த பாலாஜி முன்னதாக தான் பார்த்து வந்த தொழிலை கைவிட்டு முழுவதுமாக போதை பொருளை விற்பனை செய்வதில் களம் இறங்கியுள்ளார். DARK வெப் எனும் உலகளாவிய சட்டவிரோத கள்ள சந்தையில் ஹரேகிருஷ்ணா4U எனும் நிறுவனத்தை பதிவு செய்து LSD போதை பொருளை முர்ரே எனும் கிரிப்டோ கரன்சி செலுத்தி இறக்குமதி செய்து இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூர், கொச்சி, மும்பை, சூரத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் பலர் இவரிடம் போதை பொருட்களை வாங்கி உள்ளூர்களில் விற்பனை செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இவர்களிடமிருந்து 4343 LSD போதை பொருட்கள் பிடிப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் IPS செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இந்த போதை பொருளானது வெளிநாட்டிலிருந்து சுங்க துறைகளை ஏமாற்றி இந்தியவிற்குள் கொண்டு வரப்படுகிறது. இவை சிறிய சிரிய அளவில் இருப்பதால் இந்திய அஞ்சல் துறை மூலயமாக பொருட்கள் ஊடே வைத்து கடத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மைக்ரோ அளவில் இருப்பதால் விற்பனை நோக்கம் என வகைபடுத்துவதில் கடினமாக உள்ளது. உள்ளூர் சந்தைகளில் 3 LSD போதை பொருள் ரூபாய்10,000 வரை விற்கபடுகிறது. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் மாரடைப்பு, மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நல குறைவுகள் ஏற்படும். பெற்றோர் தங்கள் இளம் வயது பெண்கள், ஆண்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். தங்களது பிள்ளைகள் அடிக்கடி தபால் பெறுவது, பொருட்கள் ஆர்டர்களை செய்வது என சந்தேகமிருந்தால் அவர்களை நிச்சயம் சோதித்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

MUST READ