Homeசெய்திகள்தமிழ்நாடுஅட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வு

அட்சய திருதியை – தங்கம் விலை 2-வது முறை உயர்வு

-

அட்சய திருதியை – தங்கம் விலை 2-வது முறை உயர்வு

அட்சய திருதியை நாளன்று மக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்குவது வழக்கம். அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்குவது ஒரு மரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ. 360 உயர்த்தப்பட்ட நிலையில் சவரனுக்கு மீண்டும் ரூ. 360 உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,615-க்கும் ஒரு சவரன் ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.52,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.

அட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வு

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6705-க்கும் ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/gold-price-hiked-by-rs-240-per-sovereign/83304

தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.88.70-க்கும் ஒரு கிலோ ரூ.88,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.1300 உயர்ந்து ஒரு கிலோ ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ