Homeசெய்திகள்தமிழ்நாடுதிடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி!

திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி!

-

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மூன்று நாள் பயணமாக, இன்று (ஆகஸ்ட் 18) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

‘ஓணம் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’- தென்னக ரயில்வே அறிவிப்பு!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 18) காலை 07.00 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி., வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி சென்னைக்கு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் தெரிவித்திருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சுதந்திர தின தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்.

ஆளுநரைக் கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீட் விலக்கு மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு, குடியரசுத் தலைவருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

இந்த சூழலில் தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரையும் ஆளுநர் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ