spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து.....யாரெல்லாம் பங்கேற்பு? புறக்கணிப்பு?- விரிவான தகவல்!

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து…..யாரெல்லாம் பங்கேற்பு? புறக்கணிப்பு?- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து.....யாரெல்லாம் பங்கேற்பு? புறக்கணிப்பு?- விரிவான தகவல்!

we-r-hiring

75- வது குடியரசுத் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஜன.26) மாலை 05.00 மணிக்கு தேநீர் விருந்து நடைபெற்றது. தேநீர் விருந்தில் யாரெல்லாம் பங்கேற்றனர்; யாரெல்லாம் புறக்கணித்தனர் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப் பேண வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் குடியரசுத் தின தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ரகுபதி, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்ஜமின், ஜெயக்குமார், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.

“விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது…..எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

சுதந்திரத்தை நினைவுக் கூறும் வகையில் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தன்று ஆளுநர், முதலமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ