Homeசெய்திகள்தமிழ்நாடுதணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!

தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் என்பவரை ஓய்வுப் பெற அனுமதிக்காமல், தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கைகோத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல்- பிளாக்ராக் நிறுவனங்கள்!

அப்துல் சலாம், கடந்த 2018- ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது, கணக்கில் வராத சுமார் 3 லட்சத்து 30 வைத்திருந்ததாக அப்துல் சலாம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அப்துல் சலாம் வேறு பணிக்கு மாற்றப்பட்ட போதும், அவர் அதை ஏற்காமல் தொடர்ந்து, தணிக்கைத் துறையிலேயே பணியாற்றி சான்றிதழ்களையும் வழங்கினார். இதனையடுத்து, அப்துல் சலாம் பணியில் தொடர தகுதியற்றவர் என்ற வழக்கில் கடந்த 2021- ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8- ஆம் தேதி விவாதம்!

இந்த நிலையில், ஜூலை 31- ஆம் தேதி அவர் பணி ஓய்வுப் பெறவிருந்த நிலையில், அதற்கு அனுமதிக்காமல் அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

MUST READ