Homeசெய்திகள்தமிழ்நாடு"வட உள் மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“வட உள் மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

-

 

"வட உள் மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வட உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’….. இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வட உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொழுத்த வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் மே 01- ஆம் தேதி வரை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்புள்ளது.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ரசவாதி’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

வட தமிழக உள் மாவட்டங்களில் மே 02, 03- ல் வெப்ப அலை வீசக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையில் 37- 38 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். கன்னியாகுமரி, நெல்லையில் மே 01- ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டத்தில் மே 02- ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி, வட தமிழக உள் மாவட்டங்களில் மே 03- ஆம் தேதி முதல் மே 05- ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ