
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!
வானிலை நிலவரம் தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 23) வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கும் இன்று ஒருநாள் மட்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநிலத்தில் அதிகளவு வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!
தமிழகத்தில் இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்காத நிலையில், சேலம், ஈரோடு, கோவை, வேலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.