
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.பி.கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார்.

அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 36 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 28) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 33ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு மே மாதம் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா பணியில் இருந்து ஓய்வுப் பெறுகிறார்.
பதவியேற்பு விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.