
நெய்வேலியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 ரூபாயை வழங்க என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!
என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கால்வாய் அமைக்கும் பணியை அந்நிறுவனத்தின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அப்போது, விளை நெற்பயிர்களை புல்டோசர்களைக் கொண்டு அழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களின் வாதங்களை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேட்டறிந்தார். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் முன்னாள் உரிமையாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதால், அதில் விவசாயம் செய்தது அத்துமீறல் எனக் குறிப்பிட்டார்.
ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!
அதேபோல், கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பாதுகாக்காமல், இத்தனை ஆண்டுகள் விவசாயம் செய்ய அனுமதித்தது என்.எல்.சி.யின் தவறும் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூபாய் 40,000 வீதம் ஆகஸ்ட் 6- ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். அத்துடன், செப்டம்பர் 15- ஆம் தேதிக்கு பிறகு இந்த நிலத்தில் எந்த விவசாயப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.