கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அதிக வரி விதிப்பதால், ஆம்னி பஸ்கள் இயக்கத்தை முழுமையாக நிறுத்துவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 7 நாட்களுக்கு மேல் மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்கள் இயங்கப்படவில்லை. என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து சங்க பிரதிநிதிகள் அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கரை சந்தித்து மனு அளித்தனர்.அதில், கேரளா, கர்நாடகா அரசுகள் அதிக வரி விதிப்பதால் பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றும், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது. கேரளா அரசு ரூ.1,65,000, கர்நாடகா அரசு ரூ.2,00,000 வரி வரை வசூலிக்கிறது இதனால் பஸ்களை இயக்குவதில் சாத்தியமற்ற சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு அரசு வெளிமாநில பதிவு கொண்ட பேருந்துகளுக்கு வரி விதித்ததைத் தொடர்ந்து, பிற மாநிலங்களும் இதையே பின்பற்றி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த பிரச்சனைக்கு முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படமாட்டாது என்றும் சங்கம் உறுதியாக தெரிவித்துள்ளது.


