Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆடித்தபசு முன்னிட்டு ஜூலை 31- ஆம் தேதி விடுமுறை"- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

“ஆடித்தபசு முன்னிட்டு ஜூலை 31- ஆம் தேதி விடுமுறை”- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ஆடித்தபசு முன்னிட்டு ஜூலை 31- ஆம் தேதி விடுமுறை"- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
File Photo

ஆடித்தபசு நாளை முன்னிட்டு, வருகிற ஜூலை 31- ஆம் தேதி அன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ.க.வுக்கு உதவுமா அண்ணாமலையின் பாத யாத்திரை?

இது தொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆடித்தபசுவை முன்னிட்டு, வரும் ஜூலை 31- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநாளில், அரசுப் பொதுத்தேர்வுகள் ஏதேனும் இருப்பின், அதை எழுதுபவர்களுக்கு, தேர்வு தொடர்பாகப் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடுச்செய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 19- ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா, ஆண்டுதோறும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

MUST READ