
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு
அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரின் இடமாற்றமும் ரத்துச் செய்யப்படுகிறது. தமிழக நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனிடம் தொல்லியல் துறை ஆணையர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
3 வது பெண் கலெக்டராக எம்.எஸ்.சங்கீதா இன்று பதவியேற்பு
மருத்துவத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநராக கமல் கிஷோரும், ஆவின் மேலாண் இயக்குநராக வினீத்தும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராக சுப்பையனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.