spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் – செல்வப்பெருந்தகை பேச்சு

குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் – செல்வப்பெருந்தகை பேச்சு

-

- Advertisement -

குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் – செல்வப்பெருந்தகை பேச்சுமேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. அரசியல்வாதிகளால் தாங்கள் காப்பற்றப்படுவோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது நீதிமன்றத்தித்தின் இந்த தீர்ப்பு.

கொடூர குற்றம் இழைத்தவர்களுக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையானது, பெண்கள் பாதுகாப்பாக உணரவும், வன்கொடுமைகள் இல்லாத சமூகமாக உருவாக காரணமாக அமையும்.

we-r-hiring

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும்”  என்று கூறியுள்ளாா்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

MUST READ