
மாணவர்கள் தற்கொலைத் தொடர்பாக, அமைக்கப்பட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

UPI டிஜிட்டல் பரிவர்த்தனை-பிரதமர் மோடி அட்வைஸ்
சென்னையில் ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து, மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வுச் செய்வதற்காக, ஓய்வுப் பெற்ற காவல்துறை டி.ஜி.பி. திலகவதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், திலகவதி தலைமையிலான குழு மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் மீது கடந்த மார்ச் மாதம் 31- ஆம் தேதி தற்கொலைச் செய்துக் கொண்ட ஆராய்ச்சி மாணவரின் சகோதரரும், புகார் கூறியிருந்தார். மேலும், மாணவர்கள் பலரும், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் கொடுமைச் செய்வதாகப் புகார் தெரிவித்திருந்தனர்.
வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயல் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..
இதனிடையே, ஐ.ஐ.டி. மாணவர்களின் தற்கொலையைத் தடுக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும் 34 வகையான பரிந்துரைகளை ஐந்து பேர் கொண்ட குழு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.