spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் இருவர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் இருவர் கைது

-

- Advertisement -

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் இருவர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவரை பிடித்து விசாரணை செய்ததில் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. ஆள்மாறாட்டம் செய்யும் கும்பலை கண்டுபிடித்து டெல்லி போலீசார் விசாரணை செய்தனர். அதன்பேரில், நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி செய்வதற்கு மூளையாக செயல்பட்ட நரேஷ் பிஷ்னோய் என்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத வந்த சஞ்சு யாதவ் என்ற மாணவரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

we-r-hiring

அரசு கலைக் கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய ரூ.7 லட்சம் பேரம் பேசியதாகவும், முன்பணமாக ரூ.1 லட்சம் பணம் பெற்றதாகவும், எஞ்சிய ரூ.6 லட்சத்தை தேர்வு எழுதிய பின் பெற ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் நரேஷ் பிஷ்னோய் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

MUST READ