கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 20,319 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில் மழை தொடர்வதால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் 124.44 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 11,248 கன அடியிலிருந்து 15,181 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் திறப்பு வினாடிக்கு 9709 கனஅடியிலிருந்து 13,319 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 84 அடி உயரம் கொண்ட கபிணி அணையின் நீர்மட்டம் 83.96 அடியாக உள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8702 கன அடியாக தொடர்கிறது. இதேபோல் கபிணி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது கே.ஆர்.எஸ், கபிணி ஆகிய இரு அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு 16,709 கனஅடியிலிருந்து, 20,319 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டுர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,888 அடியாக உள்ள நிலையில், நீர் மட்டம் 116.39 அடியாகவும்,
நிர் இருப்பு 87.82 டிஎமசியாகவும் உள்ளது. மேட்டுரில் இருந்து வினாடிக்கு
19700 கனஅடி தண்ணிர் திறக்கப்பட்டு வருகிறது.