spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்திய வருமான வரிசட்டம், GST சட்டம் சுத்தியால் அடித்து பெறுவது போல தான் உள்ளது!

இந்திய வருமான வரிசட்டம், GST சட்டம் சுத்தியால் அடித்து பெறுவது போல தான் உள்ளது!

-

- Advertisement -

வழக்கை காட்டி வரி செலுத்துவோரை மிரட்டி, கூடுதலாக வரி செலுத்த வைக்கும் வகையில் தான் இந்த சட்டங்கள் உள்ளது என இதனால் பாதிக்கப்படுபவர்கள் சொல்கின்றனர் – முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு!இந்திய வருமான வரிசட்டம், GST சட்டம் சுத்தியால் அடித்து பெறுவது போல தான் உள்ளது!

எல்லாம் தனக்கே என்று மனிதன் நினைக்கும் போது தான் தவறு ஏற்படுகிறது என்பதனை புறநானூறு, தொல்காப்பியம் போன்றவற்றை குறிப்பிட்டு பேசினார்! வழக்கறிஞர் தொழிலில் 20% நபர்கள் தகுதி இல்லாதவர்கள் என ப.சிதம்பரம் சொன்னது உண்மை தான். வழக்கறிஞருக்கு படித்து முடிக்கும் 10ல் 7 பேர் அதற்கான தகுதி இல்லாமல் இருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனம்- உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு!

we-r-hiring

வழக்கறிஞர் மயில்சாமியின் 60 ஆண்டுகால பணியை பாராட்டும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களை உறுப்பினருமான ப.சிதம்பரம், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வழக்கறிஞர் தொழில் என்பது முன்பு போல் இல்லாமல் போட்டி மிக்க துள்ளாக மாறி இருக்கிறது இது ஆரோக்கியமானது வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில் வழக்கறிஞர் தொழில் என்பது குடும்ப வழி தொழிலாகவும், ஒரு சார்பு பிரிவினருடைய தொழிலாகவும் இருந்தது. முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் வர முடியாத காலமாக இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த தொழிலுக்கு பல முதல் தலைமுறையினர் வழக்கறிஞர்களாக வருகின்றனர். அனைத்து தரப்பினரில் இருந்தும் முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் உருவாகி வருகின்றனர்.

அண்மையில் செய்திகளில் படித்தேன். வழக்கறிஞர்கள் 20% பேர் இந்த தொழிலுக்கு தகுதி  இல்லாதவர்களாக உள்ளனர். மருத்துவ துறையை போல போலியானவர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பிக்க வேண்டும். மனிதர்கள் இருக்கும் வரை மருத்துவ தேவை இருக்கும். அதே போல வழக்குகளும் இருந்தே தீரும். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீடு வழக்கு பதிவு செய்யப்பட்டால், அது விசாரணைக்கு வருவதற்கு 31 ஆண்டுகளாகும். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் வழக்குகள் தேங்குவதாக தலைமை நீதிபதி குறிப்பிடுகிறார். இந்தியாவில் வருமான வரித்துறை சட்டங்கள் சிக்கலாக உள்ளது. அதனை ஒவ்வொரு பட்ஜெட்டின் மூலம் நிதி அமைச்சர் மேலும் சிக்கலாக்குகிறார்.

அண்மையில் கொண்டுவரப்பட்ட 3 புதிய சட்டத்திருத்தம் ஏற்கனவே இருந்த சட்டத்த்தில் 90% அதிகமான சரத்துகளை அப்படியே கொண்டுள்ளது. புதிய நேரடி வரிவிதிப்பு சட்டமும் பழைய சட்டத்தை அப்படியே காபி செய்வது போல இருந்தால் எந்த பலனும் அளிக்காது. மாறாக கூடுதலாக வழக்குகளை தான் உருவாக்கும். அரசு வருவாயை பெருகுவதற்கு பல வழிகள் உண்டு. தேனீக்கள் பூவில் இருந்து தேன் எடுப்பது போலவும் செய்யலாம். சுத்தியால் அடித்து பெறுவது போலவும் செய்யலாம்.

இந்திய வருமான வரிசட்டம், GST சட்டம் சுத்தியால் அடித்து பெறுவது போல தான் உள்ளது. வழக்கை காட்டி வரி செலுத்துவோரை மிரட்டி கூடுதலாக வரி செலுத்த வைக்கும் வகையில் இந்த சட்டங்கள் உள்ளதாக இதனால் பாதிக்கப்படுபவர்கள் சொல்கின்றனர் என பேசினார்.

பின்னர் பேசிய உச்சநீதிமன்றம் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், வழக்கறிஞர் தொழிலில் சில புல்லுருவிகள் உள்ளதால் இந்த தொழில் கெட்டுவிடாது. ஒரு வழக்கறிஞருக்கு 3 கடமைகள் உள்ளன. முதலில் தன்னை தேடி வருபவர்களுக்கு வேண்டியதை செய்து தர வேண்டும். அப்படி வருபவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்தும் அவருக்கு என்ன கிடைக்கும் என்பதை அவர்களுக்கி தெரிவிக்க வேண்டும். இரண்டாவது எதிர்தரப்பிற்கும், மூன்றாவது நீதிமன்றத்திற்கும் செய்ய வேண்டிய கடமை.  இந்த மூன்றையும் செய்ய வேண்டும். அது அறத்துடன் இருக்க வேண்டும்.

ஒருநாள் ஒரு கீரைக்காரி கதையை கேட்டுவிட்டு அவளுக்கு சாப்பாடு போட்ட ஒரு அம்மாவிடம்.அவள் குழந்தை கேட்டது, ஒரு கட்டு கீரை 10 ரூபாய் பதிலாக 7 ரூபாய் என பேரம் பேசி பணம் கொடுத்துவிட்டு அவளுக்கு உணவும் கொடுத்தாயே ஏன் என கேட்டது. அதற்கு அந்த தாய் சொன்னால் அந்த கீரையின் விலை ரூ.7 ஆதனால் அதற்கான தொகையை பேரம் பேசி கொடுத்தேன். அவள் பசியுடன் இருப்பதை அறிந்து அவளுக்கு உணவளிக்காமல் இருந்தால் அது தர்மமாக இருக்காது. என பதில் சொன்னார்.

இதை போல(கீரை கதை) தொழில் தரம்மம் வேறு, மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய தர்மம் வேறு.. இதனை வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்கள் இருக்கும். அனுபவம் தான் வாழ்க்கை.  தொழிலில் பல சிரமங்கள் வரும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு விரக்தி இருந்தாலும் அறத்துடன் இருக்க வேண்டும். நாம் வாழ்க்கையை பார்த்து மற்றவர் அறத்துடன் வாழ வேண்டும். எல்லாம் தனக்கே என்று மனிதன் நினைக்கும் போது தான் தவறு ஏற்படுகிறது என்பதனை புறநானூறு என புறநானூறு, தொல்காப்பியம் போன்றவற்றை குறிப்பிட்டு பேசினார்.

வழக்கறிஞர்களில் பலர் உண்மையான வழக்கறிஞர்கள் இல்லை என ப.சிதம்பரம் சொன்னது உண்மை தான். இதே போல் வழக்கறிஞருக்கு படித்துவிட்டு வெளி வருவோரின் 10ல் 7 பேர் அதற்கான தகுதி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் நிதர்சனம். இதனை ஒரு வழக்கறிஞராலோ அல்லது ஒரு நீதிபதியாலோ மாற்ற முடியாது. சமுதாய மாற்றம் தேவை.

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவிப்பு

MUST READ