இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.அனைத்து தரப்பினரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று ஒரு கடிதத்தை அதிமுக தலைமையகத்துக்கு அனுப்பி இருக்கிறது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றோ அல்லது வேறு யாருடைய பெயரையோ தேர்தல் ஆணையம் குறிப்பிடப்படவில்லை.
அதே வேளையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனிப்பட்ட முறையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள கடிதத்தில் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் குறிப்பிடவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தான் அ.தி.மு.க.வின் பொது செயலாளர் என்று தொடர்ந்து கூறிவரும் நிலையில் ஏன் தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி என்று பெயர் குறிப்பிடப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தால் ஏன் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனிச்சாமி என்று கடிதம் எழுதவில்லை? என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தால் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில் ஏன் குறிப்பிடவில்லை.
இதை வைத்து பார்க்கும் போது இந்திய தலைமை தேர்தல் ஆணையமானது தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்று அங்கீகரிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
நிராகரிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண கோரி விஜய பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு