spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு“திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும்” - கே.எம்.காதர் மொகிதீன் பெருமிதம்

“திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும்” – கே.எம்.காதர் மொகிதீன் பெருமிதம்

-

- Advertisement -

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு வரவேற்பு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளாா்.“திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும்” - கே.எம்.காதர் மொகிதீன்திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு வரவேற்பு அளிப்பதாக இருக்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தங்கத் தமிழகத்தில் பொங்கு புகழ் சேர்த்து வரும் திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேலான பொன்னான ஆட்சி காலமெல்லாம் தொடர்ந்து நீடிக்க இறையருள் துணை செய்யுமாக.

we-r-hiring

திராவிட மாடல் 2.0வில் கலைஞர் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்துவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் வெள்ளிக்கிழமை காலை ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. 3 மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000-ம் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000ஆகவும் வரவு வைப்பு. தேர்தலைக் காரணம் காட்டி 3 மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள்.தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த மு.க. ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடைய செய்தியாகும்.

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகள் எதிர் கொண்டு வரும்  சமூக, பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு, கடந்த 2021 மே மாதத்தில் இருந்து விடியல் பயணம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் நகரப் பேருந்துகளில் உழைக்கும் பெண்கள் தினசரி 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து, சராசரியாக மாதம் ரூ.1000 யையும் பயனடைந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000யை  வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எதிர் நோக்கியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளால் மகளிர் உதவித் தொகை செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு, அதனால் குடும்பத் தலைவிகள் சிரமங்களை சந்திக்கக் கூடாது என்ற பொறுப்புணர்வோடும்,  கோடைக் காலத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை நாட்கள் என்பதாலும், குடும்பச் செலவுகள் கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு சிறப்பு நிதியாக ரூ.2000 யையும் சேர்த்து, குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வீதம் வங்கியில் முன் கூட்டியே செலுத்தி விட்டு, அந்த இனிய தகவலை காணொளி வழியாக அறிவித்திருப்பது அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களின் சமூக நீதி பார்வையும், பாலின சமத்துவம் நோக்கிய நடவடிக்கைகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மகிழ்வுடன் வரவேற்கிறது.

திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் கூறியுள்ளாா்.

மதநல்லிணக்கத்துக்காக தொடர்ந்து உழைப்பவர் காதர் மொகிதீன் – முதல்வர் புகழாரம்

 

MUST READ