spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜப்பானின் ஒம்ரான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

ஜப்பானின் ஒம்ரான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

-

- Advertisement -

 

ஜப்பானின் ஒம்ரான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
Photo: TN Govt

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டோக்கியோவில் இன்று (மே 30) ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம், இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவிடும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே 128 கோடி ரூபாய் முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

we-r-hiring

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்- பேட்டிங், பந்து வீச்சில் கலக்கிய வீரர்கள்!

இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு இ.ஆ.ப., ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் அயுமு ஒகடா, செயல் அலுவலர் கசுமோ குரியாமா, ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாகுடோ இவானகா மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

MUST READ