spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கி 122 பேர் பலி - ஜவாஹிருல்லா இரங்கல்!

ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கி 122 பேர் பலி – ஜவாஹிருல்லா இரங்கல்!

-

- Advertisement -

ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ளமுகல்கர்ஹி கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கிப் படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மக்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சையில் உள்ளவர்கள் மிக விரைவாகக் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க உத்திர பிரதேச சுகாதாரத்துறை ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டது என்றே தெரிகிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ