காவல்துறையை கைபொம்மையாக தூக்கி போட்டு விளையாடுவது தான் அரசின் வேலையா? என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தமிழ்க அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தான் இதுவரை முதல்வர் இருந்து வந்தார்.இப்போது அவரது உள்துறையில் நடப்பது கூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. சென்னை உயர்நிதிமன்றம் ஓய்விற்கு ஒரு நாள் முன்னர் துறை ரீதியான பணியிடை நீக்க நடவடிக்கை இருக்க கூடாது என அறிவுறுத்தியும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுத்தது யார்? அதை மீண்டும் ரத்து செய்தது யார்? காவல்துறையை கைபொம்மையாக தூக்கி போட்டு விளையாடுவது தான் அரசின் வேலையா? ஆழ்வார்பேட்டையிலேயே இருந்தால் ஆட்சி இப்படி தான் இருக்கும்! இந்த அரசு ஸ்டாலினுக்கு கீழ் இயங்கவில்லை என்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது. எனக் குறிப்பிட்டுள்ளார்.