
வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி அ.தி.மு.க.வின் மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கடந்த 1989- ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. பெண் என்றும் பாராமல் கொடூரமான முறையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் நடந்தபோது நானும் சட்டப்பேரவையில் இருந்ததால் அந்த முறையில் இதைக் கூறுகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஜெயலலிதா மீது கருணாநிதி முன்னிலையில் தாக்குதல் நடந்தது. ஜெயலலிதா சேலையை தற்போதுள்ள மூத்த அமைச்சர் பிடித்து இழுத்தார். ஜெயலலிதாவுக்கு நடந்த அவமரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்திக் கூறுகிறார். சேலையையும், முடியையும் பிடித்து இழுத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை வென்றது இந்திய அணி!
பொய்யான தகவலை தரும் மு.க.ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் தருவார்கள். ஜெயலலிதா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தான் கடந்த 1991- ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் பதில் அளித்தனர்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.