Homeசெய்திகள்தமிழ்நாடுஜூலை 14- ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!

ஜூலை 14- ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!

-

 

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று (ஜூலை 10) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், ஜூலை 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றுலாத்தலம் …தென்காசியின் அகரக்கட்டு…

ஜூலை 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, ராகுல் காந்தி தகுதி நீக்கம், மகாராஷ்டிரா விவகாரம் உள்ளிட்டப் பிரச்சனைகளை எழுப்ப, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டக் கட்சிகள் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

50 நாட்களில் 3 பாமக நிர்வாகி படுகொலை- நாளை போராட்டம் அறிவிப்பு

இந்த நிலையில், தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ