Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் - பலி எண்ணிக்கை 69-ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 69-ஆக உயர்வு!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69-ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கடந்த 18, 19-ம் தேதிகளில் நடந்த மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை ஏராளமானோர் குடித்ததாக கூறப்படுகிறது. அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 69-ஆக உயர்ந்துள்ளது. சமீபகாலமாக கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 60க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தீவிர சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.

 

MUST READ