கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதை

வட நாட்டின் கட்டமைப்பும், தமிழ்நாட்டின் கட்டமைப்பும் சொல்லும் திராவிட கட்சி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால் தமிழ்நாடு எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பது தெரியும் என்று கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, நூற்றாண்டுகள் கடந்தும் கலைஞர் நினைக்கப்படுவார். மரணத்திற்கு பிறகும் கலைஞர் அதிகமாக நினைக்கப்படுகிறார், மதிக்கப்படுகிறார். கலைஞரை போன்று யாரும் அதிகமாக புகழப்பட்ட தலைவரும் இகழப்பட்ட தலைவரும் இல்லை. கொண்ட கொள்கையில் எவ்வித சமரசமும் செய்யாமல் இருந்தவர் கலைஞர்.
https://x.com/Vairamuthu/status/1797511522190823592
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, குடிசை மாற்றும் வாரியம் என பல திட்டங்களில் கலைஞர் நினைக்கப்படுகிறார். வட நாட்டின் கட்டமைப்பும், தமிழ்நாட்டின் கட்டமைப்பும் சொல்லும் திராவிட கட்சி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால் தமிழ்நாடு எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பது தெரியும்.