Homeசெய்திகள்தமிழ்நாடுகீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பளிங்கு எடைக்கல்!

கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பளிங்கு எடைக்கல்!

-

 

கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பளிங்கு எடைக்கல்!
File Photo

சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் வர்ணனைகளில் மறைந்திருக்கும் தொன்மை, தமிழகத்திற்கு மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தமிழரின் தொண்மையியல் புதுவெளிச்சம் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கீழடி அகழாய்வில் வெளிப்பட்டுள்ளது பளிங்கால் ஆன எடைக்கல்.

ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் ஒப்படைப்பு!

அகழாய்வுகளில் கிடைக்கும் பவளமணிகள், பல விதமான ஆபரண மணிகள், வட்டச்சில்லுகள், தொல் தமிழரின் பெருமையைப் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றனர். மண்ணுக்குள் புதைந்திருக்கும் பழம் தமிழரின் வாழ்வியல் ஆதாரங்கள், ஒவ்வொரு முறை வெளிப்படும் போதும், கிரீடத்தில் சேரும் மணிகளாக மின்னிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 9- ம் கட்ட அகழாய்வில் பளிங்கல்லால் ஆன எடைக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வு குழியில் 170 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த எடைக்கல், சற்று கோல வடிவில், ஒளிரும் தன்மையுடன் காணப்படுகிறது.

2 செ.மீ. விட்டம், 1.5 செ.மீ. உயரம் மற்றும் 8 கிராம் எடையுடன் உள்ள இந்த பளிங்குகல், இதுவரை கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களில் முக்கியமானவை என்கிறார் கீழடி அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் மருதுபாண்டியன்.

சிந்து சமவெளி நாகரிகம் செழிப்படைய காரணம் ஆபரண மணிகள் என்று கூறும் மருதுபாண்டியன், ஆப்கானிஸ்தானில் இத்தகைய மணிகள், முக்கிய வணிக இடத்தைப் பெற்ற நிலையில், ஏன் தமிழகத்தில் பளிங்குகல் அத்தகைய இடத்தைப் பெறவில்லை என்பது கேள்வி குறியே என்கிறார்.

மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கிய படங்கள் என்னென்ன?

தற்போது கிடைத்துள்ள பளிங்கு எடைக்கலை ஆய்வுக்குட்படுத்தும் போது, அதன் தொன்மைத் தெரிய வரும் என்று மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.

பளிங்கு எடைக்கல்லுடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் மற்றும் கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

MUST READ