
அவதூறு கருத்துகளைப் பரப்பிய வழக்கில் மான நஷ்ட ஈடாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன?”- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எனத் தெரிவித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தற்காக, இந்த நஷ்ட ஈட்டை ஷர்மிளா வழங்க வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறித்து ஷர்மிளா பதிவிட்டப் பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், ஊடகங்கள் செய்தி வெளியீட்டிருந்தால் அவற்றையும் நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் அளித்த புகாரில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாய் பணத்தில், 3 கோடி ரூபாய் மட்டுமே திருப்பி அளித்ததாகவும், மீதி பணத்தைத் தன்னிடம் தராமல் அவர் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுருந்தார்.
“தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
இது தொடர்பான செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஷர்மிளாவும் இது குறித்த பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, ஷர்மிளா மீது மான நஷ்ட ஈடு கேட்டு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.