Homeசெய்திகள்தமிழ்நாடுகொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்காலத் தடை!

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்காலத் தடை!

-

- Advertisement -

 

udhayanidhi stalin tn assembly

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூ

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னைத் தொடர்புப்படுத்திப் பேச தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூபாய் 1.10 கோடி மானநஷ்ட ஈடுக்கோரியும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, தனிப்பட்ட முறையில் அவதூறாக இருந்தால் மேற்கொண்டு பேச தடைவிதிக்க முகாந்திரம் உள்ளது எனக்கூறி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

MUST READ