spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணா தண்ணீரைத் திறந்துவிடக் கோரி தமிழக அரசு கடிதம்!

கிருஷ்ணா தண்ணீரைத் திறந்துவிடக் கோரி தமிழக அரசு கடிதம்!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

குடிநீருக்குத் தேவையான கிருஷ்ணா தண்ணீரைத் திறந்துவிடக் கோரி ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

we-r-hiring

கலாஷேத்ரா விவகாரம்- விசாரணைக்குழு அறிக்கை!

அந்த கடிதத்தில், “ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரில் இந்தாண்டு குறைவான தண்ணீரே வழங்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும். நடப்பு நீர் வழங்கும் பருவத்தில் நேற்று வரை 1.03 டி.எம்.சி. நீரை மட்டுமே ஆந்திர அரசு விடுவித்துள்ளது. ஊத்துக்கோட்டை, ஜீரோ பாயிண்ட் எல்லைக்கு நேற்று வினாடிக்கு 39.5 கனஅடி நீர் மட்டுமே கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!

தமிழகத்தில் முழுவதும் மழை இல்லாத காரணத்தால், ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டங்கள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

MUST READ