- Advertisement -

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அதன்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராக ஜெய ஸ்ரீ முரளிதரன், டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளனர்.