spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகன்னியாகுமரி அருகே பரபரப்பு - ஓடும் போதே பின் சக்கரம் கழந்து தாறுமாறாக ஓடிய அரசு...

கன்னியாகுமரி அருகே பரபரப்பு – ஓடும் போதே பின் சக்கரம் கழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து

-

- Advertisement -

குமரி மாவட்டம் பனச்சமூட்டில் ஓடும் போதே அரசு பேருந்தின் பின் சக்கரம் கழந்து தாறுமாறாக ரோட்டில் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

we-r-hiring

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து நேற்று பனச்சமூடு பகுதிக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்தானது குழித்துறை சந்திப்பு பகுதியில் வந்த போது திடீரென பின் சக்கர போல்டு நட்டுகள் தானாக கழந்ததால் பின் சக்கர டயர் கழந்து ரோட்டில் ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சத்தம்போட்டு கத்தி கூச்சலிட பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையின் நடுவே பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பேருந்தில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

MUST READ