
சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மாநிலத்தில் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான முக்கிய காரணியாக நிலம் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்களால் நிலங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் அரசு நிலத்திற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிர்வாக உத்தரவுகள், குறிப்பாணைகளைப் பிறப்பிப்பதால், நிலத்தை ஒருங்கிணைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இது நேரம் மற்றும் பண இழப்புக்கு வழி வகுப்பதாகக் கருத்து முன் வைக்கப்படுகிறது. நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை பொதுநலன் கருதிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் மற்றும் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், அந்த நிலத்திற்கான அரசின் முடிவின் படி, வருவாய் வாரியத்தின் நிலையாணை அடிப்படையில், அதை வழங்க வேண்டும். இந்த நிலப்பரிமாற்ற முறையை சட்டப்பூர்வமாக ஒழுங்குப்படுத்துவதற்கும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த சூழ்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திட்டங்களுக்காக, அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையை முறைப்படுத்தி நீர்நிலைகளைப் பாதுகாக்க, இந்த சட்டம் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜிவி பிரகாஷின் ‘அடியே’….திரை விமர்சனம்!
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக, நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புத் திட்டங்களுக்கான சட்டம்- 2023 என்று அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


