
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது – டிடிவி தினகரன் கண்டனம்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்; மும்மொழி கொள்கைக்கு ஒரு போதும் வாய்ப்பில்லை. பெரியார் காட்டிய வழியில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல் மும்மொழிக் கொள்கை ஒருபோதும் உருவாக வாய்ப்பில்லை. தேசியக் கல்விக் கொள்கையின் படி, தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புரிக்குரியது.
தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது தமிழ்நாடு அரசு. செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் கடந்த 2020- ல் உருவாக்கப்பட்டது.
“ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தேசிய கல்விக் கொள்கை என்கின்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை”. இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.