Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் - திரையரங்கு உரிமையாளர்கள்

முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் – திரையரங்கு உரிமையாளர்கள்

-

முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் – திரையரங்கு உரிமையாளர்கள்

திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் உலக அழகி போட்டி, ஐ.பி.எல் போட்டிகள் போன்ற பொழுது போக்கு அம்சங்கக்ளையும் திரையிட அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சங்கம்

சென்னை தேனாம்பேட்டையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் பாபு, மற்றும் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின் 8 வாரங்கள் கழித்து தான் ஓ.டி.டி யில் வெளியிட வேண்டும், திரையரங்களிகளில் திரையிடப்பட்டப்பின் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களுக்கு திரையரங்குகளுக்கு 10% ராயல்டி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

நடிகர்கள்

டிக்கெட் விலை அதிகபட்சமாக 250 ரூபாய் நிர்ணயிக்க அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக கூறிய அவர், நல்ல திரைப்படங்கள் வருவது குறைந்துவிட்டதால், திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டும் திரையிடும் சட்டத்தை மாற்றி உலக அழகி போட்டி, ஐ.பி.எல், உலகக்கோப்பை போட்டிகள் போன்ற பொழுது போக்கு அம்சங்களை திரையிட அனுமதி வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாக கூறினார்.

பெரிய இயக்குனர்கள் பெரிய நடிகர்களை மட்டுமே வைத்து படம் எடுக்காமல் சிறிய நடிகர்களை வைத்தும் படம் எடுக்க முன்வர வேண்டும். நடிகர்கள் நல்ல கதைகளை தேர்வு செய்து ஆண்டுக்கு 2 படங்களாவது நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

MUST READ