Homeசெய்திகள்தமிழ்நாடுமேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…

மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…

-

- Advertisement -

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது முக்கிய திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் திட்டத்திற்கான விரிவான அறிக்கையை கர்நாடக அரசு அண்மையில் மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

we-r-hiring

மேலும், திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரிடமும் கர்நாடக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உபரி நீர் பாதிக்கப்படும் என்றும், இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும், மேகதாது அணைத் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அனுமதிகளை மத்திய நீர் ஆணையம் விரைவில் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து, மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மக்களின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், நீர் வளங்களைப் பாதுகாப்பதும், மாநிலத்திற்கு உரிய நதிநீர் உரிமையை நிலைநிறுத்துவதும் அனைவரின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார். முதல்வர் முன்வைத்த தீர்மானத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் உச்சநீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுத்து வருவது ஏற்க முடியாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் பரிசீலிக்கவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய அரசை சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது. மேலும், தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் காவிரி நீர் உரிமையை பாதுகாக்கும் நோக்கில், மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் சட்டப்பேரவை ஒருமனதாக ஆதரவு தெரிவிப்பதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!

MUST READ