- Advertisement -
மகாவீர் ஜெயந்தி: மதுக்கடைகளை 4-ம் தேதி மூட உத்தரவு
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் ஏப். 4-ல் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.