spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'மக்களவைத் தேர்தல் 2024'- ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு!

‘மக்களவைத் தேர்தல் 2024’- ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு!

-

- Advertisement -

 

'மக்களவைத் தேர்தல் 2024'- ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு!

we-r-hiring

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பாக, டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் உள்ள அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

யோகி பாபு, வேதிகா கூட்டணியில் உருவாகும் ‘கஜானா’….. டீசர் வெளியீடு!

அப்போது பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும். அதன்படி, ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். அதேபோல், விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 19- ஆம் தேதியே நடைபெறும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20- ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27- ஆம் தேதி வரை நடைபெறும்; வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 30- ஆம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை ஜூன் 04- ஆம் தேதி நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.

மீண்டும் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின் காதல் காவியத் திரைப்படம் ‘அழகி’!

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ