Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவைத் தேர்தலையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கம்!

-

 

"மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Video Crop Image

மக்களவைத் தேர்தலையொட்டி, பயணிகளின் வசதிக்காக, தாம்பரம்- கன்னியாகுமரி, எழும்பூர்- கோவை இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரத்னம் படத்திற்கு யுஏ சான்றிதழ்… ஏப்ரல் 26 வெளியீடு…

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி கூட்ட நெரிசலைத் தடுக்கும் விதமாக இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஏப்ரல் 18, 20 ஆகிய தேதிகளில் தாம்பரம்- கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயில் மாலை 04.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 04.40 மணிக்கு கன்னியாகுமரியைச் சென்றடையும்.

மறுமார்க்கமாக, வரும் ஏப்ரல் 19, 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி- தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மரங்களின் நாயகன் பத்மஸ்ரீ விவேக் நினைவு தினம் இன்று!

செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக நாகர்கோவிலைச் சென்றடையும் இந்த ரயிலில் இரண்டு, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளும், 19 பொதுப்பெட்டிகளும் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏப்ரல் 18, 20 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர்- கோவை சிறப்பு ரயில் மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 08.20 மணிக்கு கோவையைச் சென்றடையும். மறுமார்க்கமாக, ஏப்ரல் 19, 21 ஆகிய தேதிகளில் கோவை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.05 மணிக்கு எழும்பூரைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ