spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாதல் தம்பதியினா் பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

காதல் தம்பதியினா் பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

-

- Advertisement -

பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள். பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி ஆட்சியர் சார் அலுவலகத்தில் தம்பதியினர் தஞ்சம்.காதல் தம்பதியினா் பாதுகாப்பு வேண்டி – ஆட்சியர் ஆலுவலகத்தில் தஞ்சம்

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 21 வயது மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலேகா 20 வயது .இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்., இந்நிலையில் ஸ்ரீலேகா வின் உறவினர்கள் ஆனைமலை ,உப்பிலியர் வீதியில் வசிக்கும்  திமுக கவுன்சிலர் சாந்தி அவரது கணவர் சதீஷ் குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா் என்றும் சுமன் வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பை துண்டித்து அராஜகம் செய்து வருவதாகவும், மேலும் நேற்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து கடுமையாக மிரட்டியதாகவும், இதனால்  தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வெளியில் செல்வதற்கே அச்சமாக உள்ளது என தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும்.

we-r-hiring

கொலை மிரட்டல் விடுத்து வரும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம் அடைந்து மனு அளித்துள்ளனா்.

இன்ஸ்டாவில் பிரபலமாக இளைஞரின் செயல் – கைதில் முடிந்த சொகம்

MUST READ