மதுரையில் பா.ஜ.க. நிர்வாகியை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
“சட்டப்பேரவையில் இன்று நடக்கப்போகுவது என்ன?”- விரிவான தகவல்!
மதுரை மாவட்டம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர், கட்சியின் ஓ.பி.சி. பிரிவின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற சக்திவேலை வண்டியூர் அருகே அவரை வழிமறித்த மர்மநபர்கள், அரிவாளால் சக்திவேலை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அந்த மர்மகும்பல் அங்கிருந்து காரில் தப்பித்து ஓடியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த சக்திவேல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சக்திவேலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து புறநகர் ரயில் சேவைகள் ரத்து!
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பா.ஜ.க. பிரமுகரின் கொலையை கண்டித்து, மதுரையில் சில இடங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.