spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

-

- Advertisement -

 

மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
Video Crop Image

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.02) நடைபெறும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

we-r-hiring

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவுத் தொடக்கம்!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம், வழங்க ஆளுநர் ஒப்புதல் தராததற்கு கண்டனம் தெரிவித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.02) நடக்கும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிறேன்.

மதுரை பல்கலைக்கழகம் பரிந்துரைத்தப் பிறகும் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திடவில்லை. தமிழகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல பேசிய ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார் சங்கரய்யா.

பா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஆளுநர் பொய் சொல்வதையே தனது தொழிலாகக் கொண்டுள்ளார். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ