மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை ஆடைகளின்றி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இன்னும் மவனமாக இருப்பது ஏன்? என ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“மணிப்பூர் வன்முறையால் என் இதயம் நொறுங்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!
அதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில், “மணிப்பூரில் பெண்களுக்கு கொடுமை இழைத்தவர்களுக்கு மரணத் தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை வேடிக்கைப் பார்த்தவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். மத கலவரம், குடும்ப பிரச்சனை எதுவாக இருந்தாலும் பெண்களே குறி வைக்கப்படுகின்றனர்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகனின் பத்திரப்பதிவு ரத்து!
சில ஆண்கள் எந்த அளவுக்கு மனிதத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.