spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!

திருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!

-

- Advertisement -

 

திருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!
Video Crop Image

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த நபரின் நடவடிக்கைகள் வினோதமாக இருப்பது சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.

we-r-hiring

இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!

கொள்ளையடிக்க வருவோர் மொத்தமாக, ரேக்கில் இருக்கும் நகைகளை அள்ளிச் செல்வர்; ஆனால், இந்த நகைக்கடைக்குள் நுழைந்த கொள்ளையன், சட்டையால் தலையில் முக்காடு அணிந்து, மயினர் செயின், பிரேஸ்லட், வளையல், மோதிரம், ஆரம் என திருமணத்திற்கு தேவையான நகைகளை தேடிப் பார்த்துக் கொள்ளையடித்திருப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் கடைக்குள்ளேயே கொள்ளையன் இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ள நகைகள் மட்டுமே திருடப்பட்டுள்ளன. மோப்ப நாய் சோதனை அடிப்படையில், கொள்ளையன் நகைக்கடையில் இடதுபுறத்தில் உள்ள பக்கவாட்டு சந்தில் நுழைந்து கடையின் பின்புறம் சென்று, வலது பக்கம் கடைசி வரை சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

100- வது போட்டியில் சதம் விளாசிய மேக்ஸ்வெல்!

அந்த பகுதியில் துளை இல்லாத நிலையில், அங்கிருந்த குழாய் வழியே ஏறிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நகைக்கடை கொள்ளையன் விட்டுச் சென்ற மாஸ்க், கையுறையை கொண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ