Homeசெய்திகள்தமிழ்நாடுகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு!

-

- Advertisement -

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா பெருந்திரளணி ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா பெருந்திரளணி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டெல்லியில் குடிரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா பெருந்திரளணி குறித்த தகவல்களை தெரிவித்து, தற்போது நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளின் நிலை குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின்போது பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையர் கே.கே.கண்டேல்வால், பாரத சாரண, சாரணியர் இயக்க தலைவர் அனில்குமார் ஜெயின், மாநில முதன்மை ஆணையர் அறிவொளி, மாநில செயலாளர் நரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

MUST READ