Homeசெய்திகள்தமிழ்நாடுதுறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும்? எ.வ.வேலு பதில்

துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும்? எ.வ.வேலு பதில்

-

துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும்- எ.வ.வேலு பதில்

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இரண்டு அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட பாலம் - அமைச்சர் எ.வ.வேலு  தகவல்

 

சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அவர், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, 20.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு, கூவம் நதிக்கரையோரம், உயர்மட்டச் சாலை அமைக்க கடந்த 2009ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், முந்தைய அரசு ஒத்துழைக்காததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், தான் முதலமைச்சருடன் டெல்லி சென்று, இப்பணியின் முக்கியத்துவம் குறித்து மத்திய அமைச்சரிடம் எடுத்துக்கூறி வலியுறுத்தியதாகவும், தொடர் நடவடிக்கை காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்

MUST READ