100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்வு
மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிப்புரியும் பணியாளர்களுக்கு வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.294 ஊதியமாக வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அவர், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
மேலும், 93 லட்சம் பேர் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், 65 லட்சம் பேர் தான் பணி செய்து வருவதாகவும், 86% பெண்கள்,14% ஆண்கள், 50% ஆதிதிராவிட மக்கள் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், தமிழகத்தில் தற்போது 20 ஆயிரம் குழுக்கள் உள்ளதாக குறிப்பிட்டவர் அதனை 30,000 குழுக்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும், பணியாளர்களின் வேலை நாட்களை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்